ஜோதிடமும் ஜாதக கேள்விகளும்
யோக நரசிம்மர் துணை கருப்பசாமி துனை ஜோதி ட த்தில் பல முறைகள் இருந்தாலும் , ஜாதகம் பற்றிய கேள்விகள் என வரும் போது சுருங்கி விடுகிறது , கேள்வி கேட்பரவரின் மனதில் உள்ள செயல் ! - நடக்குமா ? நடக்காதா ? பொருள் ! - கிடைக்குமா ? கிடைக்காதா ? சொல் ! - அமையுமா ? அமையாதா ? என்பது போன்ற இரட்டை கேள்விகளில் அடங்கி விடுகிறது . ஜோதிடரித்தில் எந்தவிதமான கேள்வியும் வரலாம் எல்லா கேள்விகளும் 12 ராசி கட்டத்திலும் ( பாவகம் ), 9 கிரகங்களிலும் ( காரகம் ), அடங்கி விடுகிறது. லக்கனம் என்ற ஒரு தத்துவம் அனைத்தையும் ஒரு மையப்புள்ளியில் வரவழைத்து நாம் தேடிய கேள்விக்கு விடையள்ளிக்கும் . அதை சரியாக செய்ய செய்ய ஜோதிடரின் அனுபவமும் , சாமர்த்தியமும் வெளிப்படும் என என் குருமார்கள் சொல்ல கேட்டுள்ளேன் . ஜோதிடரிடத்தில் வழக்கமாக கேட்கபடும் கேள்விகள் படிப்பு தொழில் திருமணம் குழந்தை பிறப்பு ஆயுள் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் சிக்க லுக்கான தீர்வு முன்னம் ஏற்பட்ட வினை முன்னோர் தவறவிட்ட வழமை செயல் வாழ்வின் குற்றம் ( சொல் . செயல் , தெய்வ ). சாபம் பாவம் ...